ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வேங்கை


ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வேங்கை

image

சூர்யா நடித்து வெற்றிகரமாக ஓடிய சிங்கம் படத்தையடுத்து இயக்குநர் ஹரி இயக்கும் படம் வேங்கை. இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் படிக்காதவன் படத்தில் நடித்த தமன்னா மீண்டும் ஜோடி சேர்கிறார்.

ஹரியின் 11-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. ராஜ்கிரண், கலாபவன்மணி, கஞ்சா கருப்பு, லிவிங்ஸ்டன், பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஆக்சன் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் கலந்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நா. முத்துகுமார், விவேகா பாடல்கள் எழுதுகின்றனர்.

விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காரைக்குடி, தென்காசி, குற்றாலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)