ரஜினி வாழ்த்து: மைனா நடிகை பெருமிதம்


ரஜினி வாழ்த்து: மைனா நடிகை பெருமிதம்

image

மைனா வெற்றியால் ஏகமாக குஷியில் இருக்கிறார் அதில் நடித்த கேரளத்து நடிகை அமலாபால். மைனாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படம், விக்ரம், ஆர்யாவுக்கு ஜோடி என பெரிய படங்களின் நாயகியாக உள்ள அமலாபாலுடன் ஒரு சந்திப்பு..

மைனா தந்த அனுபவம்?

என் கேரியரில் அதிக சந்தோஷத்தை உணர்ந்த தருணங்களுக்கு காரணம் மைனா தான். முதல் படத்தில் கொஞ்சம் சறுக்கல். ஆனால் எல்லாவற்றையும் மைனா மாற்றி விட்டது. எல்லோரும் பாராட்டியுள்ளனர். கதவைத் தட்டி ரஜினி சார் கொடுத்தாருன்னு ஒரு பொக்கே தர்றாங்க. இது எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். நினைச்சு பார்க்கவே இல்லை.

மைனாவுக்காக அந்த மலைக்காடுகளில் திரிந்த காலங்கள், பழகிய மக்கள் என எல்லோருக்கும் நன்றி. காலத்துக்கு நன்றி சொல்ல வைத்த பிரபு சாலமனுக்கு பெரிய நன்றி.

சிந்து சமவெளி பற்றி பேசவே மறுக்கிறீர்களாமே?

அதை மறக்கவே நினைக்கிறேன். வசனங்கள் புரியாத நேரத்தில் நானே அப்படி பேசியிருக்கேன். இப்போ கேரளத்திலும் மைனாவால் நல்ல பெயர் கிடைச்சிருக்கு. அப்படியே வாழ்ந்திடணும்.

ஆர்யாவின் \\\"வேட்டை\\\' படத்தில் நடிக்கிறேன். லிங்குசாமி இயக்குகிறார். எல்லாமே நல்ல கதைகள். நிச்சயம் நன்றாக நடிப்பேன் என நம்பிக்கை இருக்கு.

ஒரே ஹிட். நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இதுதான் அடுத்த சினிமாவிலும் நான் எதிர்பார்க்கிறேன். அடுத்த படத்திலும் ரஜினி சார் என்னை வாழ்த்தணும் அவ்வளவுதான்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)